டோனி மனைவியுடன் என்ன உறவு? : வெளிப்படையாக தெரிவித்த பிராவோ!!!

0
550
DJ Bravo Sakshi Dhoni relationship news Tamil

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான்.இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான்.

சென்னை அணியின் ரசிகர்கள் மாத்திரமின்றி, ஏனைய அணியின் ரசிகர்களும் சென்னை அணி வீரர்களது ஒற்றுமை மற்றும் அவர்களுக்கிடையில் உள்ள உறவு தொடர்பில் அதிகமாக பேசி வருகின்றனர்.

ஐ.பி.எல். நிறைவடைந்த காலகட்டத்தில் சென்னை அணி தொடர்பான கருத்து பரிமாரல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றது.

டோனி மற்றும் ரெய்னா ஆகியோர் சென்னை அணியின் மிகப்பெரிய சொத்து. ஐ.பி.எல். ஆரம்பித்த 2008ம் ஆண்டிலிருந்து, இருவரும் சகோதரர்கள் போன்றே பழகுகின்றனர். இருவரும் இந்திய அணிக்காக ஆடினாலும் அல்லது சென்னை அணிக்காக ஆடினாலும் இவர்களது ஒற்றுமையை பற்றி பேசாத ரசிகர்கள் இல்லை எனதான் கூறவேண்டும்.

ஆனால் இவர்களுடன் இன்னொருவரும் இருக்கிறார் என்றால் அவர் டீஜே பிராவோதான். மே.தீவுகளின் சகலதுறை வீரரான பிராவோ சர்வதேச ரீதியில் நடைபெறும் பல போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றார்.

ஆனால் சென்னை அணியில் பிரோவோ விளையாடும் போது, அவரது ஈடுபாடு மிக அதிகமாக இருக்கும். இவர் வீரர்களுடன் சகோதரர் போன்று பழகுவார் என சென்னை அணி வீரர்களும் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி டோனி மற்றும் ரெய்னாவுடன் பிராவோ அதிகமாக நெருங்கிப் பழகுவார். அத்துடன் டோனி மனைவியுடனும் பிராவோ யதார்த்தமான பழகுவது அனைவரும் அறிந்த விடயமே.

தற்போது டோனி மற்றும் டோனி மனைவியுடன் எப்படி பழகுகின்றார் என்பதை பிராவோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“நான் நிறைய வீரர்களுடன் நெருக்கமாக பழகும் ஒருவர். அதிலும் டோனி மற்றும் ரெய்னாவுடன் மிக  அதிகமாக நெருங்கிப்பழகுகின்றேன்.  இருவரும் எனது சொந்த சகோதரர்கள் போன்றவர்கள். அதுமாத்திரமின்றி டோனியின் மனைவி சாக்ஷி எனது சொந்த சகோதரி போன்றவர்” என மனம் திறந்து கூறியுள்ளார்.

<<Tamil News Group websites>>

DJ Bravo Sakshi Dhoni relationship news Tamil, DJ Bravo Sakshi Dhoni relationship news Tamil