பிரன்ச் ஓபன் மூன்றாவது சுற்றில் போராடி வென்றார் ஜொகோவிச்!

0
565
French Open 2018 Novak Djokovic 4th round news Tamil

(French Open 2018 Novak Djokovic 4th round news Tamil)

பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் சேர்பியாவின் முன்னணி வீரர் நொவெக் ஜொகோவிச் போராடி வெற்றிபெற்றுள்ளார்.

நொவெக் ஜொகோவிச் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டா ஆகட்டை எதிர்கொண்டு விளையாடினார்.

ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரண்டு வீரர்களும் பலத்த போட்டிக்கொடுத்தனர்.

முதல் செட்டை 6-4 என இலகுவாக கைப்பற்றிய ஜொகோவிச், அடுத்த செட்களில் கடுமையாக பேராடினார்.  இரண்டாவது செட்டில் பதிலடி கொடுக்க ஆரம்பித்த பட்டிஸ்டா 7-6 என போட்டியை சமப்படுத்தினார்.

இதேவேளை செட்டின் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் சுற்று இடம்பெற்றது. இருவரும் சிறப்பாக ஆட இறுதிநொடியில் 8-6 என வெற்றிபெற்று பட்டிஸ்டா ஆகட் போட்டியை 1-1 என சமப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில் மீண்டும் ஆதிக்கத்தை ஆரம்பித்த ஜொகோவிச் டை பிரேக்கருடன் 7-6 (7-4) என வெற்றிபெற்று 2-1 என முன்னிலைப்பெற்றார்.

இறுதிசெட்டில் பட்டிஸ்டா ஆகட் தடுமாற்றத்தை எதிர்கொள்ள ஜொகோவிச் 6-2 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஜொகோவிச் அடுத்த சுற்றில் ஸ்பெயினின் மற்றுமொரு வீரரான பெர்னாண்டோ வெர்டெஸ்கோவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>