மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் கணவன் சடலமாக மீட்பு

0
600
first husband murder wife hospital baby delivery kokkaticholai

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி, விடுதிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. first husband murder wife hospital baby delivery kokkaticholai

இறந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் திருமணம் புரிந்து மனைவி பிரிந்து பிரிதொரு திருமணம் செய்துக்கொண்ட நிலையில் தனித்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், முதலாவது கணவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களும் உயிரிழந்த நபருடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

அத்துடன் மனைவியின் இரண்டாவது கணவருக்கு காணப்பட்ட மூன்று பிள்ளைகளுடன மொத்தமாக ஐவருடன் வசித்து வந்த நிலையில் முதல் நாள் குறித்த ஐவருடனும் மது போதையில் வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த ஐவரும் தாய் அநுராதபுரத்தில் வசித்து வந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அநுராதபுரத்திலுள்ள தாய் தனது உறவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்தமையை தொடர்ந்து அவர்கள் சென்று பார்க்கையில் முதலாவது கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளைகளை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவி அநுராதபுரத்தில் உள்ள தனது பெண் பிள்ளைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் குற்றத்தடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்துடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.

40 வயதுடைய குழந்தைவேல் குருசாந்தராஜா என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தில் அடிகாயங்களும் வெட்டுக்காயங்களும் காணப்படுவதுடன் அருகில் இருந்து இரும்பு பொல் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
first husband murder wife hospital baby delivery kokkaticholai

More Tamil News

Tamil News Group websites :