அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் கலந்துரையாட தயார்

0
455
twenty amendment discuss all political party anurakumara

twenty amendment discuss all political party anurakumara
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மக்களை விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூல வரைவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோரிடம் மக்கள் விடுதலை முன்னணி நேற்றைய தினம் கையளித்தது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவிததுள்ளார்.

விரிவாக ஆராயாமல் குறித்த வரைவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியப்படாது எனவுவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்துக்கு இதனைத் தாமதப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால், இதனை 2, 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
twenty amendment discuss all political party anurakumara

More Tamil News

Tamil News Group websites :