முகமாலையில் வெடிபொருட்கள்; மக்கள் குடியேற நீடிக்கும் தடை

0
531
Ammunition Muhamalai

(Ammunition Muhamalai People banned Resettlement)
முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதிசெய்து, குறித்த பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படுவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்பினரும் தொடர்ந்து மோதல்களை மேற்கொண்டிருந்த முகமாலைப் பகுதிகள் அதிகளவு ஆபத்தான வெடி பொருட்கள் புதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் கடந்த கால யுத்தம் காரணமாக 2000 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர்.

இதுவரையில் குறித்த பகுதிகளில் மீளக்குடியேற்றப்படாத நிலையில், வாடகை வீடுகளிலும், பிற பகுதிகளில் உறவினர்களது தயவுகளிலும் பாரிய பாதிப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தொடர்ந்து மோதல்களை மேற்கொண்டிருந்த இந்த பகுதிகள் அதிகளவு ஆபத்தான வெடி பொருட்கள் புதைந்துள்ள பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

அந்த வகையில் இப்பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றுவது மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும் என்று வெடி பொருட்களை அகற்றுகின்ற தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் குறிப்பிடப்பிடப்படுகின்றது.

எனினும் குறித்த சுமார் 300 குடும்பங்களின் நிலைமையினை அவதானிக்கின்ற போது, அந்தக் குடும்பங்களது மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது.

இந்தப் பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றி, மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதிசெய்து, குறித்த 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படும் என்பதை அறிவிக்க முடியுமா?

அத்துடன், குறித்த பகுதிகளில் வெடி பொருட்களை விரைந்து அகற்றும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Ammunition Muhamalai People banned Resettlement