தாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை

0
1681
jaffna a9 road

(jaffna a9 road)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி- யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியின், ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

கண்டி, அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதியே தாழிறங்கியுள்ளது.

இந்த வீதி, இரண்டு ஒழுங்கைகளை கொண்டிருந்தாலும், வீதி தாழிறங்கிய பகுதியில் மட்டும், ஒரு ஒழுங்கை மட்டுமே பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை தொடருமாயின், ஏ- 9 வீதியின் மேலும் சில பகுதிகள் ஆங்காங்கே தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :