சீ.வி. விக்னேஸ்வரனை கைதுசெய்ய வேண்டும்; பந்துல

0
594
Bandula Gunawardane comments Northern Provincial Chief Minister

(Bandula Gunawardane comments Northern Provincial Chief Minister)
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தற்போது தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆகவே தேசிய பாதுகாப்பிற்கும் நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றும் வடமாகாண சபையினை கலைத்து, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி தமிழர் தாயகப் பிரதேசமான முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்றது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துக்களை விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

வடமாகாணம் தற்போது நாட்டின் பொது சட்டத்திற்கு முரணாகவே செயற்படுகின்றது. இந்த விடயத்தை ஜனாதிபதி அறியாமல் உள்ளாரா அல்லது விக்னேஸ்வரனின் கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை என்றும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bandula Gunawardane comments Northern Provincial Chief Minister