நான் கல்கி அவதாரம் – குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்

0
421
Kalkhi incarnate need come work said Indian state government official

Kalkhi incarnate need come work said Indian state government official

நான் கல்கி அவதாரம் என்றும் அதனால் வேலைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இந்திய குஜராத் மாநில அரச அதிகாரி கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திரா பெபர். அரசு அதிகாரியான இவர், கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்கு பெபர் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம் நான்தான்.வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன்.

என் தவத்தின் பயனாக சில ஆண்டுகளாக நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் அலுவலகத்தில் இருக்கும்போதுதான் நான் கல்கி அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போதிலிருந்து எனக்கு தெய்வ சக்திகள்கிடைத்து வந்தன. நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

என்னால் அலுவலகத்தில் அமர்ந்து தவம் செய்ய முடியவில்லைஎன்று கூறியுள்ளார். அரசு அதிகாரியின் இந்த விநோத நடவடிக்கை மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kalkhi incarnate need come work said Indian state government official

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :