திருப்பதியில் அமித் ஷா சென்ற வாகனம் மீது தாக்குதல்!

0
522
Party members Telugu Desam attacked vehicle BJP.

Party members Telugu Desam attacked vehicle BJP

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு  தரிசனம் செய்வதற்கு சென்ற பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க.வினர் சென்ற வாகனம்  மீது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தை முடித்துவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பா.ஜ.க. தலைவர் அமித் ஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

அதன்பின்பு, கோயிலில் இருந்து கார் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றபோது திருப்பதி மலை அடிவாரத்தில் கறுப்பு கொடியுடன் காத்திருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பியுள்ளனர்.

மேலும், அமித் ஷாவின் காரை மறிக்க முயன்றனர். அப்போது அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் சென்ற கார் ஒன்றின் கண்ணாடியை தெலுங்கு தேசம் கட்சியினர் உடைத்துள்ளனர்.

இதனால் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்பின் கார் கண்ணாடியை உடைத்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக ஆளும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டி வருகிறது . இதனால், மத்தியில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் விலக்கிக் கொண்ட நிலையில்இ அமித் ஷா மீது அக்கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Party members Telugu Desam attacked vehicle BJP

more Time Tamil News Today

Time Tamil News Group websites :