காவிரி வரைவு செயல் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி தாக்கல் செய்துவிடுவோம் –  யு.பி.சிங் 

0
468
Government Cauvery Draft Action Plan HighCommission 14th.

 

(Government Cauvery Draft Action Plan HighCommission 14th)

எதிர்வரும் 14ஆம் திகதி காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை இந்திய உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்திய மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 14ஆம் திகதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எதிர்வரும் நாளை (12ஆம் திகதி) கர்நாடக மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால் எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றும், மேலதிக அவகாசம் கேட்கலாம் என்றும் பேசப்பட்டது.

ஆனால், 14ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மேற்கொண்டு அவகாசம் கேட்க மாட்டோம் என்றும் 14ஆம் திகதி வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பித்து விடுவோம் என்றும்  இந்திய மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Government Cauvery Draft Action Plan HighCommission 14th.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :