எஸ்.வி. சேகரை கைது செய்யாமல் பாரபட்சம்: பாலகிருஷ்ணன் கண்டனம்

0
501
condemned acting discriminating againstt SV Sekar

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தின் போது முக்கிய நிர்வாகிகளை வீடு புகுந்தும் வாகனங்களை வழிமறித்தும் கைது செய்வதில் தீவிரம் காட்டிய தமிழக பொலிஸார், நடிகர் எஸ்.வி.சேகரை மட்டும் கைது செய்யாமல் பாரபட்சமாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.condemned acting discriminating againstt SV Sekar

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட எஸ்.வி.சேகரை ஒரு மாதத்திற்கும் மேலாக பொலிஸார் கைது செய்யாமலும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலும் இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தின் போது முக்கிய நிர்வாகிகளை வீடு புகுந்தும் வாகனங்களை வழிமறித்தும் கைது செய்வதில் தீவிரம் காட்டிய தமிழக பொலிஸார் ஊடகங்கள் உட்பட பணியாற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பதிவு வெளியிட்ட எஸ்.வி.சேகரை மட்டும் கைது செய்யாமல் பாரபட்சமாக செயல்படுவது கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் பா.ஜ.க. பிரமுகர்கள் ஹெச். ராஜா உட்பட பலரும் வன்முறையை தூண்டும் வகையிலும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசும் பொலிஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததே எஸ்.வி.சேகர் இவ்வாறு அநாகரீகமாகவும் சட்ட விரோதமாகவும் பேசுவதற்கு தைரியத்தை அளித்துள்ளது.

எஸ்.வி.சேகரின் உறவினரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தற்போது எஸ்.வி.சேகரின் பிணை மனுவை உயர்நீதிமன்றம் இரத்து செய்த பின்னணியில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவரை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

condemned acting discriminating againstt SV Sekar

more Time Tamil News Today

Time Tamil News Group websites :