தீர்மானம் மிக்க போட்டியில் வெற்றிபெற்றது சௌதெம்டன்!

0
616
swansea city vs southampton premier league 2018

(swansea city vs southampton premier league 2018)

பிரீமியர் லீக் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் சௌதெம்டன் அணி வெற்றிபெற்றுள்ளது.

பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய போட்டியில் சௌதெம்டன் மற்றும் சுவான்சி சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இறுதி மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு, புதிதாக மூன்று அணிகள் தொடரில் இணைக்கப்படும்.

இந்நிலையில் இன்னும் ஒரு போட்டி மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் 17வது இடத்திலிருக்கும் சௌதெம்டன் அணி, புள்ளிப்பட்டியலில் 18வது இடத்திலிருந்த சுவான்சி சிட்டி அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் எவ்வித கோல்கள் இன்றி போட்டி நகர, இரண்டாவது பாதியின் 72வது நிமிடத்தில் சௌதெம்டன் அணியின் கொபியாடினி கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியின் ஊடாக 17வது இடத்திலிருந்த சௌதெம்டன் அணி 36 புள்ளிகளுடன் 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் தங்களது பிரீமியர் லீக் இருப்பையும் உறுதிசெய்துள்ளது.

எனினும் தற்போது இந்த போட்டியில் தோல்வியடைந்த சுவான்சி சிட்டி அணி இக்கட்டான சூழ்நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 33 புள்ளிகளுடன் 18வது இடத்தை பிடித்துள்ள சுவான்சி சிட்டி அணி பிரீமியர் லீக்கில் தொடரவேண்டுமாயின் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள ஸ்டொக் சிட்டி அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்ய வேண்டும்.

<<Tamil News Group websites>>