வட கொரியா- அமெரிக்க முக்கிய ராஜதந்திர திருப்புமுனை

0
532
North Korea release US detainees

North Korea release US detainees

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர்கள் மூவரோடு நாடு திரும்புவார் என்று தென் கொரியா தெரிவித்திருக்கிறது.

தென் கொரிய ஜனாதிபதி மாளிகை அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அதுகுறித்த உறுதியான தகவல் இல்லை என்று கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர், வடகொரியா சரியான முடிவை எடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சீன அதிபரைச் சந்தித்த மறுநாள் திரு. போம்பியோவின் பயணம் அமைந்துள்ளது.