Type to search

இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் காலா பாடல்கள் : தனுஷ் அறிவிப்பு..!

CINEMA Kollywood

இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் காலா பாடல்கள் : தனுஷ் அறிவிப்பு..!

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

(Kaala Movie Songs Release Today Dhanush Announced)

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள ”காலா” படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு, ஸ்மார்ட் கார்ட் வடிவத்தில் அழைப்பிதழ் வழங்கி வருகிறது வுண்டர்பார் நிறுவனம்.

அதாவது, ”கபாலி” படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் ”காலா”. இப் படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

”கபாலி” படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையத்துள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே வெளியாகிய ”செம்ம வெயிட்” பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா மே 9 ஆம் திகதி (இன்று), சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு ஏராளமானவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ரஜினி மன்றத்தினரும் பெருமளவில் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஜினி தற்போது அரசியலில் இறங்கி உள்ளதால், கட்டுக்கடங்காத கூட்டம் விழாவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை வுண்டர்பார் நிறுவனத்தினர் எடுத்து வருகின்றனர்.

அத்துடன், வி.ஐ.பி.க்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 7 ஆம் திகதி படம் ”காலா” படம் திரைக்கு வருவதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

இவ்வாரம் வெளியாகி போட்டிக்கு தயாராகும் படங்கள் எவை தெரியுமா..?

ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Kaala Movie Songs Release Today Dhanush Announced

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •