2020ஆம் ஆண்டுடன் அரசியலில் இருந்து விலக போவதில்லை : ஜனாதிபதி அதிரடி

0
600
President says not retire 2020

(President says not retire 2020)
தான் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுடன் அரசியலில் இருந்து விலக போவதில்லை என மாவடிவேம்பில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றது. தொழிலாளர் தினத்தை தேசிய ஒற்றுமையாக்குக என்ற தொனிப்பொருளில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் கிழக்கில் நடத்தபட்ட இந்த மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

2020 ஆம் ஆண்டுடன் நான் ஓய்வுபெறப்போகிறேனா என பலர் கேட்கின்றனர். சமூக வலைப்பதிவு தளங்களில் இந்தக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

2020 ஆம் ஆண்டு ஆண்டுடன் நான் ஓய்வுபெற மாட்டேன். செய்துமுடிக்க எனக்கு இன்னும் பல கடமைகள் உள்ளன. இந்த நாட்டில் நேர்மையான தலைவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? களவாடாத,கொலை கொள்ளைகளில் ஈடுபடாத எத்தனை பேர் அரசியலில் உள்ளனர் ? இந்த கேள்வி என்னிடம் உள்ளது. ஆகவே நாம் தூய்மையான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் . இதில் கள்ளர்கள், கொலையாளிகள், ஊழல் வாதிகள் எவரும் தேவையில்லை. மக்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களே வேண்டும். 2020ஆம் ஆண்டு புதிய ஆட்சியினை அமைக்க சிலர் கனவு காண்கின்றனர். எமது அணியிலும் சிலர் அவ்வாறு கூறுகின்றனர். அதற்கு பொருத்தமான சகலரும் எம்முடன் இணையுங்கள். தேசிய ஒற்றுமையை எங்கு உருவாக்க முடியுமோ நாம் அங்கு இருப்போம் . இந்த நாட்டில் வறுமை எங்கும் இல்லாத சூழல் உருவாக்க வேண்டுமோ அங்கு நாமும் இணைந்து செயற்படுவோம். இளைஞர்களுக்கு நல்ல வேலைத்திட்டம் எங்கு உள்ளதோ அங்கு நாம் இருப்போம். படித்த கற்ற சமூகம் எங்கு உள்ளதோ அங்கு நாம் இருப்போம்.

ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நேர்மையாக செயற்பட வேண்டும். பலர் கற்பனை கதைகளை கூற முடியும். பல்வேறு கனவுகளை காண முடியும். ஆனால் அவர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தெரியாது. மக்களின் மனசாட்சிகளை தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அரசியலில் பலவீனம் அடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் நாம் பலவீனமடையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 7ஆசனங்களுடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, மூன்று துண்டங்களாக பிளவுபட்ட வரலாறுகள் உள்ளன. ஏனைய கட்சிகளுக்கும் இவ்வாறான வரலாறுகள் உள்ளன.

ஆனால் நாம் மீண்டெழுவோம். முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட கட்சியாக மாற்றுவோம். ஜனநாயக கட்சியாக மாற்றுவோம். அதன் மூலம் பலப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்றினை நாம் உருவாக்குவோம். ஆகவே இதற்காக அனைவரும் எம்முடன் ஒன்றிணைத்து எம்மை ஆதரியுங்கள். இந்த அரசாங்கத்தில் எதிர்வரும் காலத்தில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கான உறுதியான தீர்வுகளை நாம் பெற்றுத் தருவோம் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:President says not retire 2020, President says not retire 2020