ஜூரோங் வெஸ்ட்டில் பெருகிவரும் டெங்கு நோய்

0
591
Mounting Dengue Disease Jurong West

(Mounting Dengue Disease Jurong West)

சிங்கப்பூர் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் மேலும் 5 பேருக்கு டெங்குக் கிருமி தொற்றியிருப்பது கடந்த மூன்று நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அங்கு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மூவர் பலியாகினர். அதோடு ,அப்பகுதியில் இதுவரை 65 டெங்குச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தீவு முழுவதும் கடந்த வாரம் மொத்தம் 80 டெங்குச் சம்பவங்கள் பதிவாயின. முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, டெங்குச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மற்றும் , ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 91, 92 ஆகிய பகுதிகள் டெங்குப் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

tags:-Mounting Dengue Disease Jurong West

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**