நிர்மலாதேவி விவகாரம்: விசாரணை நிறைவு; ஆளுநரிடம் விரைவில் அறிக்கை அளிப்பேன் – சந்தானம்

0
449
investigation Nirmaladevi case was completed.

(investigation Nirmaladevi case was completed)

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை முடிவடைந்தது. விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்ட முயன்றதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்தானம் கூறியதாவது:

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அருப்புக்கோட்டை, மதுரையில் விசாரணை முடிவடைந்தது. சென்னைக்கு சென்று விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளேன்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்பேன். அவர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை தரப்படலாம்.

எனது விசாரணை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணையை பாதிக்காது. அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

(investigation Nirmaladevi case was completed)

 

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here