யூத எதிர்ப்புவாதம் யூதர்களுக்கு உரியதல்ல!

0
581
France news said Anti-Semitism spread

பிரான்ஸில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்புவாத அலைக்கு எதிரான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அறிக்கை ஒன்றை லா பாரிஸியன் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.France news said Anti-Semitism spread

சார்லீ ஹெப்டோவின் இணை நிறுவனர் பிலிப் வால் தயாரித்து, முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, முன்னாள் பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் மற்றும் நடிகர் ஜெரார்டு டெபார்டியூ போன்ற அறிவுஜீவிகள் கையெழுத்திட்ட அறிக்கையானது சமீபத்தில் நடைபெற்ற யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான வன்முறை தாக்குதல்களை கோடிட்டு காட்டியது.

‘யூத எதிர்ப்புவாதம் என்பது யூதர்களுக்கு மட்டுமே உரிய காரியமல்ல, எனவும் அது எல்லோருடைய காரியமாக இருக்கின்றது’ என அந்த கடிதம் குறிப்பிட்டுள்ளது, அத்துடன், யூதர்களாக இருக்கும் ஒரே காரணத்தால் சமீப காலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 11 யூதர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் சித்தரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here