முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி

0
1450
Diaspora people pay money Mullivaikal Memorial Day

(Diaspora people pay money Mullivaikal Memorial Day)
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்காக பிரித்தானியா, கனடா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் இருந்து வடக்கிலுள்ள விடுதலை புலிகளின் ஆதரவுள்ள அமைப்புகளுக்கு உதவிப் பணம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழான திவயின இன்றைய தினம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு தூபிகளுக்கு அலங்காரங்கள் மற்றும் நினைவஞ்சலிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நினைவு கூறும் விழாவுக்காக பல புலம்பெயர்ந்த மக்கள், சுற்றுலா பயணிகள் போன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதர உள்ளதாகவும் சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், மே 15 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் ஈழம் கோரிய புலம்பெயர்ந்த மக்கள் பலர் ஜெனீவா மற்றும் சூரிச் நகரத்தில் இருந்து இலங்கைக்கு விமானச் சீட்டுக்களைப் பெற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் கனடாவின் ரொரான்டோ நகரில் இருந்தும் ஈழம் கோரிய புலம்பெயர்ந்த மக்கள் பலர் இலைங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Diaspora people pay money Mullivaikal Memorial Day

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here