ஒன்றரை வருடத்தில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – துமிந்த திசாநாயக்க

0
590
tamilnews duminda dissanayaka promissed publice new ministery

(tamilnews duminda dissanayaka promissed publice new ministery)

எதிர்வரும் ஒன்றரை வருட காலப்பகுதியில் பொதுமக்களின் தேவைகளை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சு பொறுப்பை ஏற்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதே இந்த தகவலை வௌியிட்டார்.

மீதொட்டுமுல்ல, சாலாவை ஆகிய இடங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதுவரையில் முழுமையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லையாயின் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

சாலாவையில் இடம்பெற்ற சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்பொழுது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறைபாடுகள் இருக்குமாயின் அது தொடர்பான விடயங்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்கப்படும்

கடந்த காலத்தில் கொள்கை மற்றும் திட்டங்களை வகுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களின் அபிவிருத்திக்காக செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தை முன்னெடுப்பதே தனது முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் ஐந்து மடங்கு நீர்வளங்கள் உள்ளது.

தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர்பாசன அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த காலப்பகுதியில் அனர்த்தங்களை எதிர்கொண்டதால் அரசாங்கம் பல சவால்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.

தற்பொழுது வறட்சி நிவாரணம் சுமார் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. மழை இல்லாததன் காரணமாக விவசாயிகளை பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்

ஊடகவியலாளர் ஓருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சரியான உரிய தகுதிகளைக் கொண்டவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பல பிரிவுகளாக பிளவுபட்டிருந்த போதிலும், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மேலும் வலுவுள்ளதாக முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

(tamilnews duminda dissanayaka promissed publice new ministery)

More Tamil News

Tamil News Group websites :