வாழ்வா? சாவா? கடும் நெருக்கடியில் இன்று களமிறங்கும் மும்பை!

0
492
kings xi punjab vs mumbai Indians 2018 news Tamil

(kings xi punjab vs mumbai Indians 2018 news Tamil)

ஐ.பி.எல். தொடரின் வாழ்வா? சாவா? என்ற போட்டியில் மும்பை அணி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இந்தூர் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

நடப்பு சம்பியனான மும்பை அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதுடன், புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடரில் மும்பை அணி நீடித்து நிற்பதற்கு இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டியது கட்டயாம். அதுவும் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்புக்கு இடமே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளை பொருத்தவரையில் அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளுக்கு மேற்பட்ட வெற்றிகளை பெற்றுள்ளது. எனினும் மும்பை அணி மாத்திரமே இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.
இதனால் இன்றைய போட்டி மும்பை அணியின் இருப்பை தீர்மானிப்பதாக அமையும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து நிலையான இடத்தை பிடித்துள்ளது. ஏனைய அணிகள் 8 மற்றும் 9 போட்டிகள் வரை விளையாடியுள்ள நிலையில் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இன்றைய போட்டியை பொருத்தவரையில் ஓய்வளிக்கப்பட்டிருந்த கிரிஸ் கெயில் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அதேவேளை மும்பை அணியை பொருத்தவரையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மே.தீவுகள் அணியின் கிரன் பொல்லார்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு பதிலாக பென் கட்டிங் அணியில் மீண்டும் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு ஒரு லீக் போட்டியை போன்று இருந்தாலும், மும்பை அணிக்கு இதுவொரு முக்கியமான போட்டி. வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டயாம். இதனால் இன்றைய தினம் வெற்றிபெற்று தொடரை தக்கவைக்குமா? அல்லது தொடர் தோல்விதானா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

<<Tamil News Group websites>>

kings xi punjab vs mumbai Indians 2018 news Tamil. kings xi punjab vs mumbai Indians 2018 news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here