இவர் தான் பிரெஞ்சு அரசின் எதிரி!

0
1011
france.com owner case France government- American

இப்படியெல்லாம் நடக்குமா?? என ஆச்சரியத்திற்குள்ளாகும் வகையான சம்பவம் ஒன்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.france.com owner case France government- American
1994 ஆம் ஆண்டு இணையத்தளங்கள் (www) அறிமுகமாகியது. அப்போது ‘domain’ என சொல்லப்படும் இணையத்தளத்தின் பெயரை பலர் பணம் செலுத்தி வாங்கி கொண்டார்கள். france.com owner case France government- American
பிரான்ஸு அரசு சுதாகரிக்கும் முன்னர், ‘www.france.com’ எனும் முகவரியை, பிரான்ஸில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 1994 ஆம் ஆண்டு தனதாக்கிக் கொண்டார்.

பின்னர், பிரான்ஸ் அரசு தமக்கென ஒரு இணையத்தளம் வேண்டும் என முடிவெடுத்தபோது, அதனால் www.france.fr எனும் முகவரியைத் தான் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.

.fr என்பது பிரான்ஸ் நாட்டினர் மட்டுமே அதிகம் பாவிக்கும் உள்நாட்டு முகவரியாகும். ஆனால் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் .com பிரான்ஸ் அரசிற்கு கிடைக்கவில்லை.
குறித்த அமெரிக்கவாசியை தேடிப் பிடித்து பேரம் பேசி பார்த்தது பிரான்ஸ் அரசு. ஆனால் சரிப்படவில்லை. பணம் தருவதாக கேட்டுப்பார்த்தும் சரி வரவில்லை.

இந்த நீண்ட வருட ‘சிக்கல்’ இதுவரை தீர்ந்ததா என்றால் இல்லை… ஆகையால், சமீபத்தில் பிரெஞ்சு அரசு, www.france.com எனும் இணையத்தளத்தை முடக்கியதுடன், France எனும் வார்த்தையை பயன்படுத்த அனுமதி இல்லை என அறிவித்தது.

அதனால், அந்த முகவரியின் சொந்தக்காரர், அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘Domain’ னை யார் முதலில் வாங்குகிறார்களோ, அவர்களுக்கே அது சொந்தம் என்பதுதான் பொது சட்டம். ஆகையால், நான் வாங்கியது எனக்கே சொந்தம் என தெரிவித்த அவர், பிரெஞ்சு அரசின் மீதும், வெளிநாட்டு அமைச்சர் மீதும் வழக்கு தொடுத்தார்.

தீர்ப்பு யார் பக்கம் சாதமாகும் எனத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் குறித்த நபர் மாத்திரம் பிரெஞ்சு தேசத்தின் அறிவிக்கப்படா எதிரி ஆனார்!

நன்றி: இணையம்

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**