கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்

0
1113
Delayed flights Katunayake airport

(Delayed flights Katunayake airport)
வட இந்தியாவில் ஏற்பட்ட புழுதிப் புயலாலின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்றைய தினம் புறப்படவிருந்த 3 விமானங்கள் தாமதமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று காலை இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான 165 என்ற இலக்க விமானம் இன்று பிற்பகல் 12.30 க்கு புறப்படவுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் சென்னை நோக்கி இன்று காலை 8.35 க்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 129 இலக்க விமானம் இன்று காலை 10.10க்கு புறப்படவுள்ளது.

சவுதி அரேபியாவில் ஜெத்தாவை நோக்கி இன்று பிற்பகல் 2.55 க்கு பிறப்படவுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 281 என்ற இலக்க விமானம் மாலை 5.05 க்கு புறப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் நேற்றைய தினம் ஏற்பட்ட புழுதிப் புயலாலின் தாக்கமே இந்த விமானங்களின் தாமதத்திற்கான காரணம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வட இந்தியாவைத் தாக்கிய புழுதிப் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேஷ், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தீவிர இடி, மின்னல் தாக்கம் நிகழ்ந்து வீடுகள் சேதமடைந்ததில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Delayed flights Katunayake airport

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here