அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது : பலர் பலி

0
866
Military Plane Crash US

Military Plane Crash US

அமெரிக்காவில் ராணுவ விமானம் என்று விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்ஜியா மாநிலத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்து விமான ஊழியர்களும், நான்கு பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.

‘C-130 Hercules’  ரகச் சரக்கு விமானம், (Puerto Rico) போட்டோ ரீக்கோ தேசிய ஆகாயப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்டது.

சம்பவத்தில் விமானம் முற்றிலும் சேதமடைந்த காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டுவிட்டர் மூலம் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here