(Tunguska River 1908 Huge Explosion Event Truth)
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடையில்லை.
110 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவின் போட்காமேன்னயா துங்குஸ்கா ஆற்றின் அருகே ஒரு பயங்கரமான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
பைகால் ஏரியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மலைப்பகுதியில் வசித்தவர்கள் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி நீல நிறத்தில் இருந்த ஒளிமயமான பொருள் ஒன்றை வானில் கண்டார்கள்.
சூரியனைப் போல பிரகாசமாக இருந்த அந்தப் பொருள் நகர்ந்ததையும் பார்க்கமுடிந்தது. சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பீரங்கியில் இருந்து வெளிப்படும் தோட்டா ஒலியைப் போன்று தொடரொலி எழுந்தது.
50 முதல் 100 மீட்டர் அகலத்தில் விழுந்த நெருப்பு பந்தினால் இப்பகுதியின் டைகா காடுகளில் இரண்டாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எரிந்து அழிந்தது. இதனால் 8 கோடி மரங்களை சாம்பல் மேடுகளாக்கிவிட்டன.
இந்த சம்பவத்தில் சுமார் 60 கி.மீ. தொலைவில் இருந்த வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. இந்த வெடிப்பினால் வெளிவந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அதிகாரபூர்வ தகவல்களின்படி, இந்த வெடிப்பில் ஒரேயொரு ஆடு மேய்ப்பாளர் உயிரிழந்தார். வெடிப்பினால் தூக்கி எறியப்பட்ட அவர், ஒரு மரத்தில் மோதி இறந்தார். ஆனால் இந்த சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக, அங்கிருந்த விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறின.
அந்த வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் கூற்றுப்படி, ‘வானம் இரண்டு பகுதிகளாக பிளவுண்டு, அதிலிருந்து நெருப்பு கோளம் கொட்டுவது போல் தோன்றியது. தரையில் ஏதோ விழுந்ததைப் போல் பயங்கரமான ஓசை ஏற்பட்டது. அதன்பிறகு எல்லா இடங்களிலும் கல் மழை பொழிந்தது. அதன் ஓசை, துப்பாக்கியால் தொடர்ந்து சுடுவது போன்று இருந்தது’.
இந்த நிகழ்வு ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறியப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட வெப்பமானது, ஒப்பீட்டளவில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டைவிட 185 மடங்கு அதிகமாக இருந்தது என்று சில விஞ்ஞானிகள் கூறினாலும், இதைவிட அதிக சக்தி வாய்ந்தது என்றும் வேறு சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற நாளில் ஒரு விண்கல் அல்லது வால் நட்சத்திரம் பூமியில் மோதியதாகவும், இந்த வெடிப்பு சம்பவம் அதன் விளைவுதான் என்றும் பலர் கருதுகின்றனர்.
வெடிப்பு நிகழ்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதைப் பற்றி விசாரிக்க அங்கு யாரும் செல்லவில்லை.
எனினும், எரிகற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் ஏற்பட்டதைப் போல அப்பகுதியில் தரையில் எந்தவிதமான பள்ளமும் ஏற்படவில்லை.
சில ரஷ்ய ஆய்வாளர்கள், அந்த குறித்த நாளில் பூமியில் மோதியது விண்கல் இல்லை, அது ஒரு வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்புகள் உண்டு என்றனர்.
பூமியில் விண்கற்கள் மோதும்போது, பேரழிவு உருவாகிறது . உதாரணமாக ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விண்கற்கள் மோதியபோது, டைனோசர்கள் பூண்டோடு அழிந்துவிட்டன.
துங்குஸ்கா வெடிப்பு பற்றி விஞ்ஞானிகளின் ஊகங்கள் பலவிதமாக இருந்தபோதிலும், துங்குஸ்காவின் வெடிப்பு பற்றிய ஊகம் இன்னமும் சூடாகவே இருக்கிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)