இலங்கைக்கு படையெடுக்க தயாராகும் ஒரு இலட்சம் சீனர்கள்!

0
518
sri lanka government signed agreement china

(sri lanka government signed agreement china)
இலங்கைக்கு எதிர்வரும் 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் கொழும்பில் நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு சீன முறையிலான திருமணங்களை ஒழுங்கு செய்தல், தொல்பொருள் மற்றும் வரலாற்றுப் பகழ்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லல், மலையேற்றம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:sri lanka government signed agreement china, sri lanka government signed agreement china

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here