மும்பை அணியால் சாதிக்க முடியும் : பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் நம்பிக்கை!

0
576
shane bond mumbai Indians news Tamil

(shane bond mumbai Indians news Tamil)

ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பபை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் ஷேன் போன்ட் தெரிவித்துள்ளார்.

மும்பை அணி இம்முறை ஐ.பி.எல். தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட மும்பை அணியின் பிளே ஆஃப் கனவும் பறிபோய்விட்டது. எனினும் மீதமிருக்கும் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்றால், அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என ஷேன் போன்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள போன்ட்,
“எமக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ளன, அதில் அனைத்திலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 2015ம் ஆண்டும் இப்படியொரு நிலையில் இருந்து அணி மீண்டுள்ளது.

இதனால் எனக்கு அதிகமான நம்பிக்கை உள்ளது. அணியில் இருக்கும் வீரர்கள் இளம் வீரர்கள். அவர்களால் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற முடியும்.

இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால், அந்த நம்பிக்கையுடன் அணியை நாம் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here