பெஷிலஷ்விலியை வீழ்த்தி வெற்றிபெற்றார் ஜெரமி சார்டி

0
607
Istanbul Open 2018 Jeremy Chardy news Tamil

(Istanbul Open 2018 Jeremy Chardy news Tamil)

துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரான்சின் ஜெரமி சார்டி வெற்றிபெற்றுள்ளார்.

இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரின் முதல் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் ஜெரமி சார்டி, ஜோர்ஜியாவின் நிக்கோலஷ் பெஷிலஷ்விலியை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சார்டி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இவர் முதல் செட்டை தடுமாற்றத்துக்கு மத்தியில் 7-5 என கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here