லசந்த கொலை வழக்கு : முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்

0
625
Lasantha Murder Former Crime OIC Ex-DIG re-remanded

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் முன்னாள் திஸ்ஸ சுகதபல ஆகியோருக்கு தொடந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது கல்கிஸ்ஸ பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே அவரை மீண்டும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்ட போதும் கொலை தொடர்பான வழக்குகள் இடம்பெற்று வருவதால் சந்தேக நபரை விடுதலை செய்ய விசாரணை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக நீதவான் பிணை கோரிக்கையை மறுத்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க அத்திடிய கவ்டான பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here