வடக்கு, கிழக்கில் மக்களுக்காக ஒரு இலட்சத்து 67 ஆயிரம் வீடுகள் வேண்டும்

0
514
North East people need hundred 67 thousand House

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபா தேவையென அரசாங்கத்திடம் கோரிய போதிலும், இந்தத் திட்டத்திற்கு 7 ஆயிரம் மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த ஆண்டு முதல் வீடொன்றை நிர்மாணிக்க தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here