5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும்

0
613
Amnesty International Justice given Trincomalee Incident

திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்று 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்ட போதும், இலங்கை அரசாங்கம் அதற்கான பொறுப்புக்கூற தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :