உணவக உரிமையாளர்களின் தீர்மானத்துக்கு நுகர்வோர் எதிர்ப்பு

0
519
Consumer Opposition Restaurant Owners Decision tamil news

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை முன்வைத்து உணவுகளின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நுகர்வோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவில் விலை 245 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சோறு பொதியின் விலை 10 ரூபாயால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சோறு பொதியின் விலையை 10 ரூபாயால் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ள உணவக உரிமையாளர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறந்த தரத்தினை கொண்ட சோறு பொதியை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என, அந்த அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.

இதேவேளை, உணவுகளின் விலையை தொடர்பில் விதிகளுடன்; கூடிய முறைமையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here