சத்திர சிகிச்சை நிலையத்திற்குள் விரியன் பாம்பு; அதிர்ச்சியில் வைத்தியர்கள்

0
1052
Snake surgical center Kuliyapitiya Government Hospital

(Snake surgical center Kuliyapitiya Government Hospital)
குளியாப்பிட்டிய அரசாங்க வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையத்திற்குள் விரியன் பாம்பு ஒன்று நுழைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விரியன் பாம்பு சத்திர சிகிச்சை நிலையத்திலுள்ள ஒரு இயந்திரத்தின் மேல் சுருண்டு கிடந்ததை சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஊழியர்கள் பாம்பு இருப்பதைக் கண்டு பயந்து, வைத்தியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வைத்தியர் விஷப் பாம்புகளைப் பிடிக்கும் தொழிலில் பிரசித்தி பெற்றவரும் அவரின் நண்பருமான அப்பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் கோப்ரல் வசந்த குமார நரசிங்கவிற்கு அதுகுறித்து அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த வசந்த குமார, குறித்த பாம்பை உறை ஒன்றிற்குள் பிடித்து, கன்கானியம்முல்ல காட்டுக்குள் விடுவித்துள்ளார்.

இந்த விரியன் பாம்பு பெண் பாம்பு எனவும் இது குட்டி போடும் தருவாயில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் கோப்ரல் வசந்த குமார தெரிவிக்கையில், இதேபோன்று வீடுகளிலும் கடைகளிலும் 66 விரியன் பாம்புகள் நுழைந்திருந்ததாகவும் 704 நாக பாம்புகளைப் பத்திரமாகப் பிடித்து காட்டுக்குள் விடுவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொழிலில் ஈடுபடுவதாகவும் 2015 ஆம் ஆண்டில் இவ்வாறு பாம்பைப் பிடிக்கச் சென்ற போது, நாகபாம்பு தீண்டியதனால் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

தற்போது பாம்புகளைப் பிடித்து காட்டில் விடும் தொழிலை பொழுதுபோக்கிற்காக மாத்திரமே செய்வதாகவும் இதற்காக பணம் எதிர்பார்ப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags; Snake surgical center Kuliyapitiya Government Hospital