படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடிப்பு!!

0
714
Bollywood shooting site bomb blast, Bollywood shooting site bomb, Bollywood shooting site, Bollywood shooting, shooting site bomb blast

(Bollywood shooting site bomb blast)

ஷங்கர் மற்றும் ரஜினியுடனான 2.0 படப்பிடிப்பின் பணியை முடித்துக் கொண்டு, தனது ஏனைய படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று தான் ‘கேசரி’.

புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அக்ஷய் குமார் உட்பட படக்குழுவினரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

படக்குழுவினர் படப்பிடிப்பில் இருந்த வேளையில் படத்தின் சண்டை காட்சிக்கான குண்டு ஒன்று வெடித்தது. குண்டு வெடுத்த மாத்திரத்தில் படப்பிடிப்பு தளம் முழுவதும் தீப்பற்ற தொடங்கியது. இந்த தீயின் காரணமாக பல லட்ச ரூபாய் செலவில் போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான செட் முழுவதும் தீக்கிரையாகி கருகியது.

இச்சம்பவத்தையடுத்து படப்பிடிப்பு தளம் மாத்திரமன்றி பாலிவுட் திரையுலகமே பரபரப்பானது. எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

Bollywood shooting site bomb blast, Bollywood shooting site bomb, Bollywood shooting site, Bollywood shooting, shooting site bomb blast

Tamil News Groups Websites

RELATED CINEMA NEWS