தனி ஒருவனிற்கு பேயை கண்டால் பயம்!

0
695

அரவிந்த சாமி சமீபத்தில், பேய் படங்களில் நடிக்க மாட்டான், பேய் படம் பார்க்கவும் விருப்பமில்லை எனக் குறிப்பிட்டார்.

அரவிந்த சாமி – அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மே 11-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய போது நடிகர் அரவிந்த சாமி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது.

தனி ஒருவன் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதைத் தொடர்ந்து எனக்கு 15 படங்களில் அந்த கதாபாத்திரம் போலவே நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் அந்த படங்களில் நடிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

வித்தியாசமான கதைகளில் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன். நான் பேய் படம் நடிக்கவும் மாட்டேன். பார்க்கவும் மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED NEWS>>

**Tamil News Groups Websites**

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here