தண்ணீர் வெளியேறும் ஒட்டையில் சிக்கிய சிறுவன்!

0
645
12 year boy stuck swimming pool

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளதுடன் இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.12 year boy stuck swimming pool

அமெரிக்காவில் உள்ள அவிஸ்டா சொகுசு விடுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பனுடன் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடியுள்ளான். அப்போது அச் சிறுவனது கால், தண்ணீர் வெளியேறும் ஒட்டையில் சிக்கி அவன் உயிரிற்கு போராடியுள்ளான்.

அதனை கண்ட அவனது நண்பன் அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளான். அனைவரும் அந்த சிறுவனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

அதன் பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு குழு ஒன்று அச் சிறுவனை 9 நிமிடங்கள் போராட்டத்தின் பின்னர், நீச்சல் குளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. இதனையடுத்து, சிறுவன் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here