விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்

0
602
YSRCP chief Jagan Mohan Reddy stabbed Visakhapatnam Tamil News

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப் பட்டிணத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (YSRCP chief Jagan Mohan Reddy stabbed Visakhapatnam Tamil News)

இவரை சிறிய கத்தியால் இனந்தெரியாத நபர்கள் பின்னால் இருந்து தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில், இதுதொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கத்தி குத்தில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அண்மையில் ஆந்திராவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; YSRCP chief Jagan Mohan Reddy stabbed Visakhapatnam Tamil News