அரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்

0
1002
Worm Government Office Restaurant Food

(Worm Government Office Restaurant Food)
பத்தரமுல்ல – செத்சிறிபாய அரசாங்க அலுவலக வளாகத்திலுள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சமைத்த உணவில் புழுவொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்தை ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டை நகர சபையின் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பத்தரமுல்ல, செத்சிறிபாய அரசாங்க அலுவலக வளாகத்தில் மூன்று உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்கள் அசுத்தமாக இருப்பதாக இங்குள்ள அலுவலக சேவையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த அலுவலக வளாகத்தில் அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பல அலுவலகங்கள் அமைந்துள்ளது.

இவைகளில் சேவை செய்வோர் மற்றும் இங்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்களும் இந்த உணவகங்களில் இருந்து உணவை கொள்வனவு செய்கின்றனர்.

இந்த உணவகங்களில் பரிமாறப்படும் உணவு சுத்தமற்றதாகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும் பரிமாறப்படும் உணவுகளுக்கு அவர்களின் இஷ்டப்படி பணம் அறவிடப்படுவதாகவும் இங்குள்ள அலுவலக சேவையாளர்கள் கூறுகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Worm Government Office Restaurant Food