கனடாவில் உலகின் மிகப்பெரிய ராட்சத வாத்து!

0
380

உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது. இந்த இறப்பர் வாத்து சுமார் 60 அடி உயரத்தை கொண்டது என்பதுடன் 14.5 தொன் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறப்பர் வாத்து Mama Duck என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ள றொரன்டோ நீர் விழாவில் இந்த வாத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இந்த வாத்து கனடாவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிறுவர்களை கவர்ந்து இழுக்கும் ஓர் பொருளாக இந்த இறப்பர் வாத்து கருதப்படுகின்றது.