(Without removing sentiments rights Muslim people hisbulla)
முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“தமிழீழ விடுதலைப் புலிகளால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது.
இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம்.
ஆனால், இந்தளவு மோசமான – அகோரமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் தலைவர் மர்ஹும் அஷ்ரப் தலைமையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறிபால ஆர்டிகல உள்ளிட்ட அரசியல் உயர் மட்டத்தில் அடிக்கடி பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒருவாரத்தின் ஏறாவூரிலும் படு மோசமான பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த ஷுஹதாக்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகவோ எம்மால் முழு கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் பாதுகாக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு விரட்டியடித்தார்களோ அதே போன்று கிழக்கிலிருந்தும் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம்களை அடித்து விரட்ட கடும் முயற்சிகளை செய்தனர்.
விடுதலைப் புலிகளின் அந்த கடுமையான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு பள்ளிவாசல் படுகொலைச் சம்பவங்கள் பெரும் தாக்கம் செலுத்தியது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய தேவை – உணர்வு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
காத்தான்குடி படுகொலை சம்பவத்தில் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் வழங்கியது. இராணுவ முகாம்களை கோரினோம் வழங்கினார்கள், காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரினோம் அமைத்தார்கள், ஆயுதம் கோரினோம் வழங்கினார்கள்.
ஷுஹதாக்கள் படுகொலை சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம்.
இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஷுஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள். எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.
எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். இன்று நாங்கள் எமது பிரதேசத்தை கிழக்கு மாகாணத்தில் முக்கிய பிரதேசமாக அபிவிருத்தி செய்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
(Without removing sentiments rights Muslim people hisbulla)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com