தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 3 ஆவது வாரத்தில் தாமதமாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (Winter Session Parliament begin December 3rd week)
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகுவது வழக்கமாகவுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டிருப்பார்கள்.
தேர்தல் பிரசாரத்துக்கு வசதியாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தள்ளிப்போடுவது குறித்து டெல்லியில் இன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசனை இடம்பெற்றது.
இதில் நவம்பர் மாத இறுதிக்குப் பதிலாக டிசம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பின்னர் குளிர்கால கூட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்
- செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
- பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு
- பெற்ரோல், டீசல் விலை குறைப்பு; பிரதமர் மோடி யோசனை
- சபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்
- பிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்
- பாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Winter Session Parliament begin December 3rd week