இளம் பெண் தற்கொலை: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த உறவினர்கள்

0
902
Wife Suicide India Tamil News

உத்தரப்பிரதேசத்தில் மனைவி தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோவாக எடுத்து இணையத்தில் போட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Wife Suicide India Tamil News

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த நாட்டையும் ஒப்பிடும் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிகளவு குற்றங்கள் நடப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் குடும்பத்தார் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பதாவது,உத்திரபிரதேசத்தில் மதுரா பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மனமுடைந்து வீட்டின் கதவை பூட்டி கொள்கிறார்.

திடீரென சேலை ஒன்றினை எடுத்து மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அனைவரும் வேண்டாம் வேண்டாம் என கூச்சலிட, ஒருவர் மட்டும் விடுங்கள் அவள் சாகட்டும் என்கிறார்.

அதற்குள் அந்த இளம்பெண் தூக்கில் தொங்கியபடியே துடிதுடித்து இறந்து போகிறார். இதனை வீடியோவாக படம் பிடித்த கணவன் வீட்டை சேர்ந்த ஒருவர் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது அதனை வீடியோ எடுக்க துணிந்த அந்த நபர் அவரை காப்பாற்ற கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.

கொஞ்சம் முயற்சி செய்திருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களைதான் பலர் வேடிக்கை பார்ப்பது, செல்பி எடுப்பது வீடியோ எடுப்பது என செல்கின்றனர் என்றால் வீட்டில் தற்கொலை செய்பவர்களையும் காப்பாற்றாமல் வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது அவலத்தின் உச்சம்.