நுவரெலியா நகரத்திற்கு அருகில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயத்தில் பூஜைகள் செய்து வந்த 53 வயதான பூசாரி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (Wife refused husband’s body)
நுவரெலியா அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பூசாரியின் உடலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற அவரின் மனைவி இருதய நோயினால் மரணமடைந்த தனது கணவன் அணிந்திருந்த தங்க நகைகள் இல்லாமையினால் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே தனது கணவனின் உடலைப் பெற்றுக்கொள்ளாது, திரும்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போயுள்ளது.
இதன்பின்னர் உயிரிழந்த பூசகர் தங்கியிருந்த அறையில் இருந்த பை ஒன்றில் தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, மறுநாள் உயிரிழந்தவரின் மனைவி வைத்தியசாலைக்கு சென்று உடலை பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.
நுவரெலியா திடீர் மரண பரிசோதகர் பீ. ருத்திரசேகரம் மரண பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளார்.
tags :- Wife refused husband’s body
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க ரத பவனி வந்தாள் நாகபூஷணி!
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!