ஹன்வெல்ல பிரதேசத்தில் புஸ்ஸெல் அருவியில் மிதந்துகொண்டிருந்த ஆணின் சடலம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Wife killed husband wife arrested police)
இந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலைசெய்து, சடலத்தை புஸ்ஸெல் அருவியில் போட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
37 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனக்கும் தனது கணவனுக்கும் இடையில் எப்போதும் தகராறு ஏற்படுவதோடு, அதனால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக இந்த பெண் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி குறித்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் தாயார் பொலிஸாருக்கு தெரிவித்தமையினால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவரின் 8 வயது சிறுமி தனது தகப்பன் மற்றும் தாயாருக்கு இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், இருவரும் தங்களை தாக்கிக் கொண்டனர் என்றும் அதற்கு பின்னர் தான் நித்திரை கொண்டதாகவும்,
மறுநாள் காலையிலும் இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டதாகவும், எழுந்து பார்க்கும் போது தனது தாயின் கையில் தடி ஒன்று இருந்தாகவும் பின்னர் தனது தகப்பனை வேரு நபருடன் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
அதன் பின் இருவரும் சடலத்தை இந்த அருவியில் போட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த மிரிஹானை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Wife killed husband wife arrested police