இலங்கை சுங்கத் திணைக்களத்தால் சோதனையிடாமல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களிலும் என்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியலை பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
இந்த கொள்கலன் தொடர்பாகவே இன்றையதினம்(09) உதய கம்மன்பில சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து சிஐடியிலிருந்து அவர் வெளியேறியிருந்தார்.
இவ்வாறு விசாரணைக்கு முகம் கொடுத்த நிலையிலேயே குறித்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான பட்டியலை அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








