தொடர்ந்து குளவிக்கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்கள்! : இன்று மஸ்கெலியாவில்…

0
604
wasp attack 15 workers injured news Tamil

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த 15 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழவிக்கொட்டுக்கு இலக்காகிய 15 பேரும் சிகிச்சைக்காக மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மலையகத்தில் தற்போது குளவிக்கொட்டுக்கு இலக்காகும் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் குளவிக்கொட்டு தொடர்பான செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் போதும், உரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்கத் தவறிவருகின்றனர்.

பல்வேறு பகுதிகளிலும் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளர்கள் காயமடைந்திருந்தாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் கடந்த மாதம் 22ம் திகதி தியத்தலாவ லிந்தஎல்ல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

இதனால் எதிர்வரும் காலங்களில் குளவிக்கொட்டிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

wasp attack 15 workers injured news Tamil,wasp attack 15 workers injured news Tamil,wasp attack 15 workers injured news Tamil