விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் 10ம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தை கமல் ஹாசன் நடித்து இயக்கியுள்ளார். பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா மீண்டும் இப்படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். Vishwaroopam2 movie Pooja Kumar tamil news
இந்த படம் குறித்து பூஜா குமார் பேசிய போது, படம் தாமதமானதில் எந்த கவலையும் இல்லை. எங்கள் கடின உழைப்பை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி. என் கதாபாத்திரத்தை கமல்ஹாசன் உருவாக்கியுள்ள விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அதாவது, நீருக்கு அடியில் வெடிகுண்டை செயலிழக்க செய்ய வேண்டும். நீருக்கு அடியில் வேறு எந்த நடிகையும் இதுவரை ஸ்டண்ட் செய்ததில்லை. நல்ல தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்..