பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு சீரியல் .இதில் நடித்து வரும் செம்பா எனும் கதா பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ஆகும் .இதில் நடித்த செம்பா எனும் ஆல்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருகின்றது (Vijay tv raja rani serial alya manasa sharing video )
இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் நாடு கடந்து தமிழ் ரசிகர்கள் அதிகம். இப்படி இருக்க, இவர் வெளிநாடுகளில் நிறைய தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது, விளம்பரங்கள் நடிப்பது வழக்கம். இந்நிலையில், இவர் கனடா நாட்டிற்கு வருவதாக கூறி ஒரு கும்பல் பணம் வசூல் செய்து வருகிறது.
இதனையறிந்த செம்பா என்று அழைக்கபடும் நடிகை ஆலியா மானசா கனடா மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நான் கனடா நாட்டிற்கு வருவதாக சிலர் பணம் பறிக்கிறார்கள். யாரும் நம்ப வேண்டாம் கனடா மக்களே” என காணொளி மூலம் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.