வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.Vijay donates rs70 lakh Kerala Flood
அந்தவகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஒரு வழியாக மழை நின்று நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்தார்.
இந்நிலையில், விஜய் இருப்பதிலேயே அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உண்டு.
மேலும், விஜய் படம் ரிலீஸானால் அதை திருவிழா போன்று கொண்டாடுவார்கள். தன்னை கொண்டாடும் மக்களுக்காக தாராளமாக நிதியுதவி அளித்துள்ளார் விஜய்.
அத்துடன், விஜய் செய்த நல்ல காரியம் பற்றி அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் பெருமையாகப் பேசி வருகிறார்கள்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* முப்படைகளை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடிக்கு நேர்ந்த சோகம்..!
* நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!
* ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!
* கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!
* பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?