பாடகி சின்மயி தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். (vairamuthu reply chinmayi sexual predators)
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியிருந்ததுடன், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது காணொளி மூலம் சின்மயிக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து காணொளி மூலம் வைரமுத்து கூறியதாவது, ‘என் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை.
முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன்.
மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆண்டோர்களோடும் கடந்த ஒரு வாரமாக கலந்தாலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன்.
எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவரா கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்’ என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்
- பெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது! – விசாரணை ஆணையம்!
- 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், ஆனால் டாஸ்மாக் எப்போதும் திறந்திருக்கிறது! – கமலஹாசன்!
- ரவுடி பினுவுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக்காவல்..!
- வீட்டிற்கே மதுபானங்கள்..! – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..!
- மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா!
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; vairamuthu reply chinmayi sexual predators